பவர்ஸ்டார் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா மிஸ்கின் படத்தை மறுத்த காரணம்?

இன்றைய இளம் இயக்குனர்கள் தங்கள் படத்துக்கு இசையமைக்க படையெயடுக்கும் முதல் சாய்ஸ் இளையராஜாதான். பல இயக்குனர்கள் இளையராஜாவின் வெறியர்களாகவே இருந்துவருகிறார்கள்.மிஷ்கின் அதில் ஒருவர். என் தந்தையை விட அதிகம் இவ்ரை நேசிக்கிறேன் என்று ஒரு விழாவில் சொல்லி வந்தார். அந்த அளவிற்கு பக்தியாக காணப்படும் அவருக்கு அடுத்த படத்திற்கு இசையமைக்க மறுத்து வருகிறார் இளையராஜா.
பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு.இந்த படத்துக்கு இளையராஜா கண்டிப்பாக வேண்டும் என்று முடிவெடுத்த மிஷ்கின் மதுரை சென்று நேரிலேயே கெஞ்சினாராம்.ஆனாலும் மனம் இறங்கவில்லை இளையராஜாவுக்கு. ஆனால் தற்போது இளையராஜா பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்புகொண்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.பவர் ஸ்டாரைவிட மிஷ்கினை குறைவாக மதிப்பிடுகிறார் இளையராஜா என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. கலைஞர்களுக்கு தனிப்பட்ட மனக்கசப்புகள் இருக்கலாம்.ஆனால் அதனை தொழில் விசயங்களில் வெளிப்படுத்த கூடாது என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும்.இதனால் நஷ்டப்படுவது ரசிகர்கள் மட்டுமே.